இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 157 கலைப் பொருட்கள் அமெரிக்காவில் மீட்பு

0 2440

இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட  157 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டன.

7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கும் செம்மண் புத்தர் சிலை, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிற்கும் கோலத்தில் புத்தரின் வெண்கலச் சிலை, நான்கு கரத்துடன் கூடிய 11 ஆம் நூற்றாண்டு திருமால் சிலை, வெண்கல நடராஜர் சிலை உள்ளிட்ட சிலைகளும் உயரிய கலைப்பொருட்களும் பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன.

மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஜான் கென்னடி விமான நிலையத்தில் இருந்து இந்தியா புறப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments