ஏழுமலையான் கோவில் வழிபாட்டுக்கு இணையத்தளத்தில் ஒரு மணி நேரத்தில் 2.4 இலட்சம் பேர் பதிவு

0 1896

திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாட்டுக்கு இணையவழிப் பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேர் அணுகும் திறனுடன் இருந்த இணையத்தளம், ஐந்தரை இலட்சம் பேர் அணுகும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை ஜியோ, டிசிஎஸ் நிறுவனங்கள், திருமலை திருப்பதி ஆகியவற்றின் தொழில்நுட்ப அணியினர் இணைந்து ஒன்றரை மணி நேரத்தில் சரி செய்துள்ளனர்.

வெள்ளியன்று ஒரே நாளில் ஒருகோடிப் பேர் இணையத்தளத்தைப் பார்த்துள்ளனர். இந்தத் தளத்தில் இலவசத் தரிசனத்துக்கான சீட்டுக்களையும் முன்பதிவு செய்யும் வசதி முதன்முறையாக தொடங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments