300 கோடி செலவில் ஏகே-103 போர் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக வாங்க விமானப்படை ஒப்பந்தம்

0 6273
300 கோடி செலவில் ஏகே-103 போர் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக வாங்க விமானப்படை ஒப்பந்தம்

300  கோடி ரூபாய் செலவில் 70 ஆயிரம் AK-103 போர் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக வாங்க  விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது விமானப்படை பயன்படுத்தும் INSAS துப்பாக்கிகளுக்குப் பதிலாக இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் கிடைக்க உள்ள இந்த துப்பாக்கிகளால் போர்த் திறன் மேம்பட்டு தீவிரவாத தாக்குதல்களை இன்னும் திறமையாக  சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 47 துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமான ஏகே-103, தற்போது  கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் மற்றும்  காஷ்மீர் உலார் ஏரி ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

விமானப்படைக்கு மொத்தம் ஒன்றரை லட்சம் நவீன துப்பாக்கிகள் தேவைப்படும் நிலையில், தற்போது ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள AK-103 துப்பாக்கிகள், நாட்டின் பல பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கருடா சிறப்பு படையினருக்கு வழங்கப்படும்.

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் மோதல் போக்கு ஏற்பட்ட பிறகு, சுமார் ஒன்றரை லட்சம் அமெரிக்க தயாரிப்பான Sig Sauer துப்பாக்கிகள், 16 ஆயிரம் Negev Light Machine Guns ஆகியவற்றை இந்தியா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments