காலேஜ் போகும் போது லவ்வருடன் லிவிங்டுகெதர்.. தவிக்கும் தஞ்சாவூர் பொண்ணு..! 'காதலை கைவிட நாட்டாமை தீர்ப்பு'

0 50507

தாய் கூலிவேலைப்பார்த்து மகளை பொறியியல் கல்லூரிக்கு படிக்க அனுப்பிவைத்த நிலையில், உடன் படித்த மாணவரின் காதல்வலையில் சிக்கியதால் , வாழக்கையை இழந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா. கணவனை இழந்த தாயார் கூலி வேலை பார்த்தாலும், சுகன்யாவை கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிக்க அனுப்பி வைத்தார்.

கல்லூரி பேருந்தில் பயணம் செய்த போது நண்பராக அறிமுகமான விஜய் என்ற மாணவருடன் காதலில் விழுந்த சுகன்யா, காதலன் விஜய்யின் ஆசை வார்த்தையை உண்மை என்று நம்பி படிப்பை மறந்து கணவன் மனைவியாக வாழத்தொடங்கியதாக கூறப்படுகின்றது. இருவரும் ஒரே சாதி என்பதால் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்காது என நம்பிய சுகன்யா விஜய் அழைத்த இடத்துக்கு எல்லாம் சென்று தங்கி வந்ததாக கூறப்படுகின்றது. விடுமுறை நாட்களில் கூட வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் வளைத்து வளைத்து காதலித்துள்ளனர்...

கடந்த 2015 முதல் 2019 வரை கல்லூரி சென்ற நாட்களில் படிப்பை மறந்து காதலனுடன் மனைவியாக வாழ்ந்து பொழுதை கழித்த நிலையில், கல்லூரி படிப்பு முடிந்ததும் காதலன் விஜய்க்கு கல்லூரி காதல் கசக்க ஆரம்பித்தது . இதற்கிடையே திருச்சி மாநகராட்சியில் பணி கிடைத்ததும் விஜய், நைசாக சுகன்யாவிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.

நம் காதலுக்கு வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை, அதனால் தன்னை மறந்து விடுமாறு கூறி கழட்டிவிட்ட விஜய்க்கு கடந்த 4ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வருகிற 13-ஆம் தேதி வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில் சுகன்யா மாவட்ட காவல கண்காணிப்பாளரை சந்தித்து தனது காதல் கணவனை சேர்த்து வைக்குமாறு புகார் அளித்தார்

ஒரு புறம்... காதலன் விஜய் குடும்பத்தினரின் பேச்சைக்கேட்டுக் கொண்டு, ஐந்து லட்சம் ரூபாய் பணம் பெற்றுத் தருகிறோம் உங்கள் பெண்ணை ஒதுங்கிவிட சொல்லுங்கள் என ஊர் நாட்டாமைக்காரர்கள் வீட்டில் மிரட்டியதாக புகார் எழ, மறுபுறம்... ஊர் பஞ்சாயத்தாரும் பணம் வாங்கிக் கொண்டு ஒதுங்கி விடு என மிரட்டி வருவதாக குற்றஞ்சட்டியுள்ள சுகன்யா, தனக்கு பணம் வேண்டாம் காதலன் விஜயுடன் சேர்ந்து வாழும் திருமண வாழ்க்கை போதும் என்று கண்ணீருடன் கலங்கி நிற்கிறார்...

கல்லூரி காலத்தில் படிப்பை மறந்து காதலில் விழுந்தால் இறுதியில் என்ன மாதிரியான விபரீத நிலை ஏற்படும் என்பதற்கு இந்த லவ் பிரேக் ஜோடிகளே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments