ஆம்னி பேருந்து ஓடும்…! ஓடாது..! போட்டி அறிவிப்பு..! அரசு பேருந்து தான் பெஸ்ட்

0 7512
ஆம்னி பேருந்து ஓடும்…! ஓடாது..! போட்டி அறிவிப்பு..! அரசு பேருந்து தான் பெஸ்ட்

சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று ஒரு சங்கம் அறிவித்துள்ள நிலையில் பயணிகளின் வருகையை பொறுத்து அதிகாலையில் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாக மற்றொரு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வெளியூர் பயணிகளுக்கு ஆபத்பாந்தவனாக மாறி உள்ள அரசு பேருந்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுதலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு பகல் நேரங்களில் மட்டும் தொலைதூர ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் என்பவர் அரிவித்திருந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் போதிய பயணிகள் வரத்து இல்லாததால், தாங்கள் ஆம்னி பேருந்துகளை இயக்கபோவதில்லை என்று சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர், அறிவித்தார்

இதற்கிடையே சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்து ஓடுமா ? ஓடாதா ? என்ற குழப்பத்துடன் மீண்டும் அப்சலை அனுகிய போது அவர், காலை 5.30 பேருந்துகள் சேவை தொடங்கி இரவு 9.30 மணிக்குள் சேவையை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
வாடிக்கையாளர் சேவை மற்றும் தங்களின் நிலையை கருதி நஷ்டத்தில் இயங்கினாலும் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

12 மணி நேரம் பயணம் உள்ள இடங்களுக்குச் செல்ல இரவு நேரங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் தற்போது பகல் நேரங்களில் செல்ல அதிக அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் சுட்டிகாட்டிய அப்சல், குறிப்பாக இணையம் மூலம் புக் செய்யப்படும் இருக்கைகளின் எண்ணிக்கை 35 சதவீதம் கூட தாண்டாத நிலை தான் தற்போது வரை இருந்து வருகிறது. பேருந்துகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

பகல் நேரத்தில் ஏசி பேருந்தை இயக்கினால் அதிக எரிபொருள் செலவாகும் என்பதாலும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து கொரோனா பரவாமல் தடுக்கும் நோக்கத்திற்காகவும் பேருந்தை இயக்கவில்லை என்கிறார் சங்க செயலாளர் மகேந்திரன்

மொத்தத்தில் ஆம்னி பேருந்து இயக்கப்படுமா ? என்று கூறுவதையே சுற்றிவளைத்து கோரிக்கைகளோடு சொல்லும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மத்தியில் எந்தெந்த ஊருக்கு எந்த நேரத்தில் பேருந்து இயக்கப்பட உள்ளது என்று நேர விவர பட்டியலை அறிக்கையாக கொடுத்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் எப்போதும் போல இப்பவும் கெத்துதான்..!

அதே நேரத்தில் கூடுமானவரை அவசியமில்லா வெளியூர் பயணங்களை தவிர்த்தாலே கொரோனா பரவுதல் கட்டுக்குள் வரும் என்பதை வெளியூர் செல்லும் சென்னை வாசிகள் உணர வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments