கடலில் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத இலங்கை மீனவர்கள் இருவர்

0 139

இலங்கையின் தலைமன்னாரைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கரை திரும்பாததை அடுத்து அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் தலைமன்னாரில் இருந்து வியாழக்கிழமை ஒரு படகில்  மீன்பிடிக்கச் சென்ற கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கரை திரும்பாததால் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உறவினர்கள்  மனு அளித்தனர்.

இதையடுத்து இலங்கைக் கடற்படையினரின் உதவியுடன் மன்னார் வளைகுடாப் பகுதியில் மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை அரிச்சல்முனைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களிடம் காணாமல் போன மீனவர்கள் குறித்துத் தலைமன்னார் மீனவர்கள் விசாரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments