கொரோனாவால் சிகிச்சை பெற்றுவந்த துரைமுருகன் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்

0 6166
கொரோனாவால் சிகிச்சை பெற்றுவந்த துரைமுருகன் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீடு திரும்பினார்.

காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனுக்குத் தேர்தலுக்குப் பின் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் முதலில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன்பின் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பினார்.

வீட்டுத் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments