ஓசூர் அருகே பூமி பூஜை விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியின் போது விபரீதம்.. மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

0 2126
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பூமி பூஜை விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பூமி பூஜை விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்திபள்ளியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பூமி பூஜை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் 4 பேர் பந்தல் அமைக்க இரும்பு தூணை தூக்கி நிறுத்தியுள்ளனர்.

அப்போது, உயர் மின் அழுத்த கம்பியில் இரும்பு தூண் உரசி மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயர்மின் அழுத்த கம்பி, சுற்றுச்சுவரை ஒட்டி தாழ்வாக சென்று கொண்டிருந்ததை கவனிக்காததால் 4 பேரும் உயிரிழக்க நேரிட்டுள்ளது. மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments