வைரல் வீடியோ : விராட்கோலியை அலேக்காக தூக்கி அனுஷ்கா சர்மா பெருமிதம் !

0 6868

விராட்கோலியை தூக்கும் வீடியோவை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டகிராமில் பகிர அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

கிரிக்கெட்டில் பிசியாக இருக்கும் விராட்கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு கடந்த ஜனவரி 11ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வமிகா என பெயரிட்ட விராட்கோலி - அனுஷ்கா ஜோடி தங்களது புகைப்படங்களை அவ்வபோது இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பர். அதேபோன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மா பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விராட் கோலியை பின்புறமாக இருந்து பிடித்துக் கொள்ளும் அனுஷ்கா சர்மா அவரை ஒரு இன்ச் அளவுக்கு மேலே தூக்குகிறார். மீண்டும் தன்னை தூக்குமாறு விராட்கோலி கூற, அதேபோன்று பின்புறமாக நின்று கொண்டு விராட்-ஐ அனுஷ்கா தூக்கினார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அனுஷ்கா, ”என்னால் இது முடிந்தது தானே” என கேள்வி எழுப்பினார். அதற்கு விராட் கோலியும் ஸ்மைலியை பதிலாக அனுப்ப அவரது ரசிகர்கள் லைக்குகளை வழங்கினர்.

அண்மையில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த அனுஷ்கா சர்மா, விராட் கோலி தம்பதியினர், 2 மாத மகள் வமிகாவை தூக்கி கொண்டு அனுஷ்கா முன்னதாக செல்ல, பின்னால் பைகளை எடுத்து கொண்டு விராட்கோலி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

 

 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments