'பல்லாவரம் சந்தையில் அவனுக்கு தீர்ப்பு எழுதுவேன்!'- ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் வீரலட்சுமி சபதம்

0 11543
தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி

வீரலட்சுமிக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  தனக்கு ஆபாச படங்களை அனுப்பியவனுக்கு பல்லாவரம் சந்தையில் வைத்து  தீர்ப்பு எழுதுவேன் என்று வீரலட்சுமி சபதமிட்டுள்ளார்.

தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி என்பவர், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.  இவர், ராமபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வருகிறார். சட்டசபை தேர்தலில் மை இந்தியா பார்ட்டியின் சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 17 ஆம் தேதி இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போதிலிருந்து வீரலட்சுமியின் வாட்ஸப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பரங்கிமலை துணை கமிஷனரிடத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். அதில், அருவெறுக்கதக்க வகையிலும் எனது தேர்தல் பணியை தடுக்கும் வகையிலும் எனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். எனக்கு இப்படி மனஉளைச்சலை ஏற்படுத்துபவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வீரலட்சுமி தமிழக டிஜி.பி. திரிபாதி, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ,சென்னை கமிஷனர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், என் கைபேசி , வாட்ஸப்பில் தொடர்ந்து பல்வேறு வீடியோ காட்சிகளை அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை 3 தினங்களுக்குள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நானே, சம்பந்தப்பட்டவனை பிடித்து பல்லாவரம் சந்தையில் நிர்வாணமாக கட்டி வைத்து அவனுக்கு தீர்ப்பு கொடுப்பேன் . அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிடுவேன்'' என்று  தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments