தமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 4830
தமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  567 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில், பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  521 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சென்னையைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். 

சென்னை மாநகரில் 228 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு பதிவாகவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments