நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வந்த ரவுடி, காவல்நிலையம் அருகே வெட்டிப் படுகொலை... மைனர் மணியின் கொலைக்கு பழிக்கு பழியா?

0 9008

சிவகங்கை அருகே நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வந்த ரவடியை, காவல்நிலையம் அருகே மர்மக்கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. மானாமதுரையைச் சேர்ந்த மைனர் மணி என்பவர், ஜனவரி 9ம் தேதி மர்மக்கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அக்னிராஜ் என்பவன், காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளான்.

அப்போது அவனை வழிமறித்த மர்மக்கும்பல்,சராமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது. மைனர் மணியின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவனது கூட்டாளிகள் இந்த கொலையை நிகழ்த்தியிருக்கக்கூடும் என போலீசார் கூறியுள்ளனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments