மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் எண்ணூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

0 5917
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் எண்ணூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

உலோகத் தொழில் நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்களின் பங்கு விலைச் சரிவால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் எண்ணூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. பகல் ஒன்பதே முக்கால் மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 895 புள்ளிகள் சரிந்து ஐம்பதாயிரத்து 550 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 241 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து நான்காக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்களின் பங்குவிலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments