வரும் 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்

நடிகர் ரஜினிகாந்த் வரும் 26ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது திருமண நாளை முன்னிட்டு, வரும் 26ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாகவும், பின்னர் செய்தியாளர்களை ரஜினி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ரஜினி தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், ரஜினி சார்பில், சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளுக்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments