நாட்டின் அழிவுக்கான மனிதராக, அவநம்பிக்கை மனிதராக, ராகுல் காந்தி மாறி வருகிறார்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் அழிவுக்கான மனிதராக, அவநம்பிக்கை மனிதராக, ராகுல் காந்தி மாறி வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக சாடியுள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மத்திய அரசு மீது, ராகுல் முன்வைத்த புகாரை மேற்கோள்காட்டி கடுமையாக சாடினார். பெரு முதலாளிகளுக்கான அரசாக மோடி அரசு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஏழை-எளியோரும், அவர்களுக்கான திட்டங்களுமே, மோடி அரசின் கூட்டாளிகள் என உறுதிபடக் கூறினார்.
மன்மோகன்சிங் சொன்னதையே செய்தோம் என்ற பிரதமரின் பேச்சுக்குப் பிறகு, காங்கிரசார், குறிப்பாக ராகுல் காந்தி வாய் திறக்க மறுப்பதாக, நிர்மலா குற்றம்சாட்டினார். நாட்டின் அழிவுக் கால மனிதராக மாறி வரும் ராகுல் தலைமையில்தான் எதிர்க்கட்சிகளும் அணிவகுப்பதாக, நிர்மலா சாடியுள்ளார்.
Comments