கொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி

கொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி , கொல்லி மலை பகுதியில் 20 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கக்கூடிய நீர் மின் திட்டத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இடம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக கூறினார். இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா முத்தூர் நீர் வீழ்ச்சியிலும் நீர் மின் திட்டம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சோலார் மின் இணைப்பு கொண்ட வீடுகளுக்கு விரைவில் நெட் மீட்டர் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Comments