செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது; 6 டன் எடையுள்ள செம்மரம், வாகனங்கள் பறிமுதல்

செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது; 6 டன் எடையுள்ள செம்மரம், வாகனங்கள் பறிமுதல்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட சர்வதேச கடத்தல்காரர்களான சிம்பதி, பக்ரூதீன் ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் என 11 பேரைக் கைது செய்திருப்பதாக கடப்பா மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கடத்தலுக்கு பயன்பட்ட 3 கார்கள், மற்றும் இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிம்பதி,பக்ருதீன் ஆகியோர் மீது 62 செம்மர கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Comments