ஜன.27ம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகிறார்: கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வ தகவல்

0 2345

சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27 ஆம் தேதி,  விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை தொடர்பான பத்திரங்களில் கையெழுத்து பெற்று அவருக்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments