விவசாயிகளின் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் வரும் 11 ஆம் தேதி விசாரணை

0 1155
விவசாயிகளின் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 11 ஆம் தேதி விசாரிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 11 ஆம் தேதி விசாரிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட பலரும், விவசாயிகளின் போராட்டங்களை எதிர்த்து மூன்று மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் அடங்கிய அமர்வு 8 ஆம் தேதி அன்று விசாரணை நடத்தப்படுமென கூறியது.

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 8 ஆம் தேதி அன்று மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்றார்.

இதில் சுமூக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வருகிற 11 ஆம் தேதி அன்று விவசாயிகளின் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படுமென நீதிபதிகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments