தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1314

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments