ராமநாதபுரம் : காதலித்து கைப்பிடித்த மனைவி : விவகாரத்து கேட்டு வழக்கு, நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கணவன்

0 5741

ராமநாதபுரத்தில் காதலித்து கைப்பிடித்த மனைவி, விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி கொலைசெய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் வஉசி நகர் பகுதியை சேர்ந்த சரவணன்-சிவபாலா தம்பதி, கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், 3 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ முடிவு செய்த சிவபாலா, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்று விட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மறித்த சரவணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தப்பி ஓட முயன்ற கணவனை போலீசார் பிடித்து விசாரித்த போது கையில் அரிவாளுடன் எந்த பதற்றமும் இல்லாமல் போலீசாரின் கேள்விக்கு சரவணன் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments