தனது கட்சி கொள்கை வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி அடித்துவிடுவார்கள் என்பதால் வெளியே சொல்லவில்லை - கமல்ஹாசன்

0 3849
தனது கட்சி கொள்கை வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி (COPY) அடித்துவிடுவார்கள் என்பதால் வெளியே சொல்லவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி கொள்கை வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி (COPY) அடித்துவிடுவார்கள் என்பதால் வெளியே சொல்லவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கட்டமைத்த சமுதாயத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.

திருமங்கலத்தில் கமல்ஹாசன் மெளன பிரச்சாரம்

மதுரை திருமங்கலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மெளன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள கமல்ஹாசன், திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலை முன்பாக மௌனமான முறையில் தனது கட்சிக்கு,ஆதரவு திரட்டினார்.

மைக் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என போலீசார் அறிவுறுத்தியிருந்ததால், வாகனத்தில் நின்றவாறு, கூட்டத்தை நோக்கி கையசைத்து சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments