கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு குறிஞ்சிபாடி அருகே அடூர், அகரம், கல்குணம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அவர்களுக்கு அரிசி, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதேபோன்று, ஆதிநாராயணபுரத்திலும் தண்ணீரில் இறங்கி நடந்து சென்று ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், சிதம்பரத்தில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
Comments