முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி

முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிகழ்விடத்தில் பலியானார்கள்.
தாட்பனில் இருந்து கர்நாடக மாநிலம் குர்மித்கல்லுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, மல்காபூர் கேட் அருகே விபத்து நிகழ்ந்தது.
முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த போர்வெல் லாரி மீது இன்னோவா கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் சென்றவர்களில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர், ஐதராபாத் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். உள்ளனர்.
Comments