காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணம்

0 1076
காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணம்

காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வீரமரணமடைந்தார்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தர்கண்டி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதேபோல் ரஜவ்ரி பகுதியிலும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் சக வீரர்களைக் காப்பாற்ற பிஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் பாட்டின்சாட் கைட் என்ற அதிகாரி தீரத்துடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தார். கொல்லப்பட்ட துணை ஆய்வாளருக்கு பி.எஸ்.எஃப் ஐஜி என்.எஸ். ஜாம்வால் அஞ்சலி செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments