பாடத் திட்டம் குறைப்பு குறித்து முதலமைச்சரிடம் திங்கட்கிழமை அறிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

பாடத் திட்டம் குறைப்பு குறித்து முதலமைச்சரிடம் திங்கட்கிழமை அறிக்கை-செங்கோட்டையன்
பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பான விவரங்கள் முதலமைச்சரிடம் வரும் திங்கட்கிழமை அளிக்கப்பட உள்ளதாகவும், முறையான அறிவிப்பு நான்கைந்து நாட்களில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தேர்தல் பிரச்சாரம் எப்போது தொடங்கும் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து, அதிமுக உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்றார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் வாக்கு வங்கி அதிகரிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது மக்கள் கையில்தான் உள்ளது என செங்கோட்டையன் பதிலளித்தார்.
Comments