கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மரணம்

0 1524
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மரணம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குருகிராம் மருத்துவமனையில் கடந்த 15ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக அவரது மகன் பைசல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகமதுபடேல் காங்கிஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்து வந்துள்ளார்.

சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகராவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் குஜராத்தில் இருந்து மக்களவைக்கு எட்டு முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 4 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments