நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க நாராயணசாமி உத்தரவு

நிவர் புயலை எதிர்கொள்ள புதுச்சேரியில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற 120க்கும் மேற்பட்ட மீனவர்களை, கடற்படை மூலம் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றார்.
நாளை மாலையில் இருந்து 25ஆம் தேதி வரை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும், வியாபார நிறுவனங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், புதுச்சேரி தேங்காய்த்திட்டு, சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு உள்ளிட்ட எட்டு கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துத் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநிலத் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கவுபா காணொலியில் கலந்துரையாடினார்.
Comments