சவுகார்பேட்டை வழக்கு : ஜெயமாலாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு

0 935

சென்னையில் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயமாலாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார், மனு தாக்கல் செய்துள்ளனர்.

பைனான்சியர் தலீல் சந்த், உள்ளிட்ட மூன்று பேர்  கொல்லப்பட்ட வழக்கில்  ஜெய்ப்பூரில் பிடிபட்ட முன்னாள் விமானப்படை அதிகாரி ராஜூ துபே, தனிப்படை போலீசாரிடம்  கொடுத்துள்ள வாக்குமூலத்தில், இரண்டரை லட்சம் ரூபாய்க்கு காரை விலாஷூக்கு விற்பனை செய்ததாகவும்,  காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுக்க மறந்து விட்டதாகவும் கூறி உள்ளார். 

ஆனால், உரிமம் பெற்ற துப்பாக்கியை மற்றவருக்கு கொடுத்ததால் ராஜூ துபே மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த யானைக்கவுனி போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய லைசென்ஸ் துப்பாக்கி, கள்ளத் துப்பாக்கி மற்றும் ஒரு காரைபறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments