கிண்டி பாம்பு பண்ணையில்., மலை ஓணான்கள்.! மிக அருகில் கண்டு ரசிக்க ஏற்பாடு.!

0 7300
கிண்டி பாம்பு பண்ணையில்., மலை ஓணான்கள்.! மிக அருகில் கண்டு ரசிக்க ஏற்பாடு.!

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையில் உள்ள இகுவானா எனப்படும் வெளிநாட்டு மலை ஓணான்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. வெஜிட்டேரியன் ஓணான்களை பார்க்கச் செல்வோருக்கு சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டிருப்பது, குறித்த செய்தித் தொகுப்பு...

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணை வளாகத்தில், இகுவானா எனப்படும் வெளிநாட்டு மலை ஓணான்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, வெளிநாட்டு மலை ஓணான்களை மிக அருகில் இருந்து பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவிலேயே முதல்முறை என, கிண்டி பாம்பு பண்ணை நிர்வாகம் கூறியுள்ளது. இதுவரையில், கண்ணாடி கூண்டிற்கு வெளியே நின்று ரசித்து வந்த நிலையில், இனி, அந்த கூண்டுக்குள்ளே சென்று ரசிக்கலாம்....

இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பல மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடந்த பொதுமக்களும் குழந்தைகளோடு வந்து இகுவானாக்களை கண்டு ரசித்து வருகின்றனர். ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலம் என 3 வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் இந்த இகுவானா களை தொட்டுப் பார்க்க அனுமதி இல்லை என்றாலும் மிக அருகில் சென்று ரசிக்கலாம் என்பதால் பொதுமக்கள் பலரும் அவற்றை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் இந்த வெளிநாட்டு மலை ஒணான்களை காணவரும் பொதுமக்களே அவற்றிற்கு காய்கறி, கீரை போன்றவை உணவுகள் அளிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தனி சிறப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments