கடும் வெள்ளத்தை தாங்கும் முருகன் கோவில்..!

0 24295
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ள நீரால் குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ள நீரால் குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

நெல்லையின் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் குறுக்குத்துறை முருகன் கோயிலும் ஒன்று.

17-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் தாமிரபரணி ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட இந்தக் கோயில், கடந்த 300 வருடங்களுக்கும் மேலாகக் கடுமையான பல வெள்ளப்பெருக்கைச் சந்தித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

உள்ளே வரும் வெள்ளம் வெளியேறுவதற்குப் போதுமான இடைவெளி இருப்பதால் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அத்துடன், இந்தக் கோயிலின் சுவரானது படகின் முன்பகுதியைப் போல கூர்மையான, மிகுந்த மதிநுட்பத்துடன் கட்டப்பட்டிருப்பதால் எத்தகைய வெள்ளத்திலும் சேதமடைவதில்லை என கூறப்படுகிறது.

மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சாமி சிலைகளை அருகே உள்ள மேல கோவிலில் வைத்து பூஜை நடத்துவது என அறநிலைத்துறை முடிவெடுத்துள்ளது.

கோவிலில் கந்த சஷ்டி யாகசாலை பூஜை நடப்பதால், செவ்வாயன்று பூசாரி மற்றும் ஒருசில பக்தர்கள் மட்டும் கோவிலின் வடக்கு பகுதி வழியாக தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று கோவிலில் வழிபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments