காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை ஏற்படுத்த குப்கார் கூட்டணி முயற்சி? - அமைச்சர் அமித்ஷா

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை ஏற்படுத்த குப்கார் கூட்டணி முயற்சி? - அமைச்சர் அமித்ஷா
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் கொதிப்பான காலத்தை மீண்டும் ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
தேச விரோதமான காஷ்மீர் கட்சிகளின் குப்கார் கூட்டணியில் இடம் பெறுவது குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குப்கார் கூட்டணி நாட்டின் தேசியக் கொடியைக் கூட மதிக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
இதனிடையே அமித்ஷாவுக்கு பதில் அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை தேசிய விரோதிகள் போல் முத்திரை குத்தப்படுவதாக தெரிவித்தார்.
Comments