சென்னை சௌகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் அடைப்பு

0 1672
சென்னை சௌகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் அடைப்பு

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 

சவுகார்பேட்டையைச் சேர்ந்த தலீல்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் பூனேவில் இருந்து வந்து சுட்டு கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் மகாராஷ்டிராவில் வைத்து ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அழைத்துவரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்குப் பின் ஜார்ஜ் கோட்டை 8வது பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெயசுதா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments