விமானநிலையம், விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளுக்கு மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி

விமானநிலையம், விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளுக்கு மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி
சென்னை விமான நிலையம் மற்றும் விரைவு ரயில்களில் செல்லும் பொதுமக்கள் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு மின்சார ரயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் புகைப்பட அடையாள அட்டைகளுடன் தங்கள் நிறுவனர்கள் வழங்கிய அங்கீகாரக் கடிதங்களை சமர்ப்பித்து டிக்கெட் வாங்கலாம் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் சென்னையில் இருந்து பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் பயணம் மேற்கொள்வோர் பயணத் தேதியன்று மின்சார ரயிலில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments