டிஜிட்டல் நியூஸ் மற்றும் OTT தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன - மத்திய அரசின் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர்

0 3961
டிஜிட்டல் நியூஸ் மற்றும் OTT தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன - மத்திய அரசின் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர்

ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கடந்த மாதம் OTT தளங்களை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது.

அதை விசாரித்த நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்குமாறு அரசு மற்றும் இன்டர்நெட்-மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை வெளியிடும் ஓடிடி தளங்களை செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments