தயாராகும் பைடன்-பிடிவாதத்தில் டிரம்ப்

0 1749
தயாராகும் பைடன்-பிடிவாதத்தில் டிரம்ப்

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்க மறுத்து  டிரம்ப் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அடுத்த 73 நாட்களுக்குள் வெள்ளை மாளிகையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் புதிய அதிபர் ஜோ பைடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெரும்பான்மையான 270 வாக்குகளையும் கடந்து 290 இடங்களை கைப்பற்றி உள்ளார் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன். 214 இடங்களை மட்டும் பெற்று தோல்வியை தழுவியுள்ள அதிபர் டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து பல வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாது என அவர் கூறிவருவதால், அதிபர் அதிகார மாற்றங்களுக்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் இது வரை துவக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அதிகார மாற்றத்தை முன் நின்று நடத்த வேண்டிய ஜிஎஸ்ஏ எனப்படும் அரசுத் துறையில் டிரம்ப் நியமித்த ஆட்கள் இருப்பதால், வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகை பணியாளர்களை நியமித்தல், அதிகார மாற்றத்திற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் பைடன் தரப்பிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதை பொருட்படுத்தாமல், பைடன் தரப்பு அதிகார மாற்றத்திற்கான இணையதளத்தையும், டுவிட்டர் கணக்கையும் துவக்கி உள்ளது. அதில் நிறவெறியை தடுப்பது, கொரொனா கட்டுப்பாடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திங்கள்கிழமை அன்று பைடனும், கமலா ஹாரிசும் சேர்ந்து வில்மிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்து கொரோனா நடவடிக்கை குழு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர். பொருளாதார சீரமைப்புக்கான திட்டத்தையும் பைடன் அப்போது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments