தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்பிடம் மெலனியா வலியுறுத்தல்?

0 1910
தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்பிடம் மெலனியா வலியுறுத்தல்?

அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளுமாறு, டிரம்பிடம் அவரது மனைவி மெலனியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்பிடம் அவர் இதை தனிமையில் கூறியதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வழக்கமாக பல விவகரங்களில் தனது கருத்தை டிரம்பிடம் அவர் தனிமையில் தெரிவிப்பதை போன்று தேர்தல் முடிவு பற்றியும் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்பின் உள்வட்டத்தில் உள்ள உறவினர்களும்,நண்பர்களும் அவரிடம் தொடர்ந்து கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

டிரம்பின் மருமகனும், மூத்த அரசியல் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னரும் இதே கருத்தை டிரம்பிடம் ஏற்கனவே வலியுறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments