பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெத்வதேவ் சாம்பியன் பட்டம்

0 708
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெத்வதேவ் சாம்பியன் பட்டம்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் மெத்வதேவுடன் மோதினார்.

2 மணி 7 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments