மியான்மர் தேர்தல்: பொறுப்பில் இருக்கும் ஆங் சான் சூயின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் என கருத்து

0 1255
மியான்மர் தேர்தல்: பொறுப்பில் இருக்கும் ஆங் சான் சூயின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் என கருத்து

மியான்மரில் நடக்கும் தேர்தல், அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆங் சான் சூயின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என மொத்தம் 1171 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் 90 க்கும் அதிகமான கட்சிகள் போட்டியிடுகின்றன.

சுமார் 3.7 கோடி பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். 50 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு 2015 ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூயின் கட்சி  பெரும் வெற்றி பெற்றது.

ஆனாலும் நாடாளுமன்றத்தில் ராணுவத்திற்கு 25 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால், நாட்டை நிர்வகிப்பதில் ஆங் சான் சூயிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. ரோஹிங்யா அகதிகள் விவகாரத்திலும் உலக நாடுகள் அவர் மீது பலத்த விமர்சனத்தை வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments