பிலிப்பைன்சை தாக்கிய உலகின் மிக வலிமையான 'கோனி புயல்'..!

0 7702
பிலிப்பைன்சை தாக்கிய கோனி புயல் காரணமாக 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிலிப்பைன்சை தாக்கிய கோனி புயல் காரணமாக 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசன் தீவு மாகாணத்தின் பிகோல் பிராந்தியத்தில் உள்ள கேடான்டுவானஸ் மற்றும் அல்பேவில் கோனி புயல் கரை கடந்தது. இதனால் மணிக்கு 310 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. காற்றின் தாக்கத்தினால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

உலகில் மிக வலிமையான புயலாகக் கருதப்படும் கோனி புயலின் தாக்கத்தினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். புயலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 அல்பே மாகாணத்தில் உள்ள மயோன் எரிமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments