டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது: வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது: வானிலை ஆய்வு மையம்
அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசுபாடு மேலும் 40 விழுக்காடு உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை டெல்லி காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட காற்று மாசு 40 விழுக்காடு அதிகரித்திருப்பது இதுவரை இல்லாத அளவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments