ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக்கோசு”

0 5329
ஓசூர் அருகே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் சக்தி கொண்ட புரோக்கோலி என்றழைக்கப்படும் பச்சை பூக்கோசுவை பயிரிட்டு லாபம் பார்த்து வரும் பட்டதாரி விவசாயி ஒருவர், ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் வரை மகசூல் கிடைப்பதாகக் கூறுகிறார்.

ஓசூர் அருகே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் சக்தி கொண்ட புரோக்கோலி என்றழைக்கப்படும் பச்சை பூக்கோசுவை பயிரிட்டு லாபம் பார்த்து வரும் பட்டதாரி விவசாயி ஒருவர், ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் வரை மகசூல் கிடைப்பதாகக் கூறுகிறார்.

முட்டைக்கோசும் காளானும் கலந்து செய்த கலவை போல காட்சியளிக்கும் இந்த புரோக்கோலி இத்தாலி நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது.

பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) உட்பட ஏராளமான சத்துகளை உள்ளடக்கிய இந்த புரோக்கோலி தமிழில் பச்சை பூக்கோசு என்றழைக்கப்படுகிறது.

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த புரோக்கோலியில் உள்ள சல்ஃபோரபேன் புற்றுநோயை கட்டுக்குள் வைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒசூர் அருகே பைரமங்கலம் கிராமத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான சுதாகர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த புரோக்கோலியை பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருவதாகக் கூறுகிறார்.

ஒரு ஏக்கரில் புரோக்கோலியை பயிரிட அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் செலவாவதாகக் கூறும் சுதாகர், ஏக்கருக்கு 3 டன் மகசூல் கிடைப்பதாகவும் அதன் மூலம் 3 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

2 முதல் மூன்று மாத காலப் பயிர் என்பதால், ஆண்டுக்கு 3 முதல் 4 முறை அறுவடை மேற்கொண்டு லாபம் பார்க்கலாம் என்கிறார். வெளியூர் வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச் செல்வதால் பெரிய அளவில் அலைச்சலும் இல்லை என்கிறார் சுதாகர்.

ஒரு கிலோ புரோக்கோலியை நூறு ரூபாய் முதல் 150 வரை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், அதனை கிலோ 300 ரூபாய் வரை விற்பனை செய்வதால் அவர்களும் போதிய லாபத்தை ஈட்டுவதாகக் கூறுகின்றனர்.

மொத்தத்தில் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் புரோக்கோலியானது அதனை பயிர் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தருகிறது என்றால் அது மிகையில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments