செனகல் கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து 140 பேர் பலி

0 1923
செனகல் கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து 140 பேர் பலி

செனகல் நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 140 பேர் பலியாகினர்.

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் திட்டத்துடன் அகதிகள் ஏராளமானோர் கப்பல்களில் பயணிப்பது வாடிக்கையாக உள்ளது.

அதுபோல செனகல் நாட்டின் ம்போர் பகுதியிலிருந்து கேனரி தீவுகளுக்கு அகதிகள் 200 பேரை ஏற்றிக் கொண்டு கடந்த சனிக்கிழமை கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.

அந்த கப்பல், செயின்ட் லூயிஸ் அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து மூழ்கியுள்ளது. விபத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments