பீகாரில் துர்கா சிலை கரைப்பு வன்முறை தொடர்பாக முங்கர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிப்பு

0 1628
பீகாரில் துர்கா சிலை கரைப்பின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முங்கர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிப்பு

பீகாரில் துர்கா சிலை கரைப்பின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முங்கர் காவல்துறை கண்காணிப்பாளரை பதவியிலிருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று நடந்த வன்முறை நிகழ்வின் போது இரு காவல்துறை வாகனங்களும், புறக்காவல் நிலையம் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முங்கர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ்மீனா மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லிப்பி சிங் ஆகியோரை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது.

முங்கர் வன்முறை குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments