புல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்

0 11365
புல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் தான் என்பதை அந்த நாட்டு அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  சிஆர்பிப் வீரர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு  பொறுப்பேற்றிருந்த நிலையில், தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவத் சவுத்திரி ஹுசேன், புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் தலைமையிலான அரசின் மிகப்பெரிய சாதனை என்று கூறினார். இதன் மூலம் புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலமாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments