'தமிழ் பேசத்தெரியாத குஷ்பு திருமாவை அவதூறாகப் பேசலாமா?' -  போதை ஆசாமி  தற்கொலை முயற்சி

0 8556

‘ஒழுங்காகத் தமிழ் பேசத் தெரியாத குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாகப் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று கூறி திருச்சியைச் சேர்ந்த போதை ஆசாமி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்...

சமீப காலமாக, பாஜக செய்தித் தொடர்பாளர்  குஷ்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மனுநீதியை உதாரணம் காட்டி பேசிய திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். பதிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆங்காங்கே பாஜகவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்...

திருச்சி ஜெயில் பேட்டையைச் சேர்ந்தவர் அந்தோணி. ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றும் அந்தோணி பாலக்கரை பகுதியில் மிதமிஞ்சிய போதையில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் தள்ளாடியபடி, 'தமிழ் பேசத் தெரியாத குஷ்பு திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசுவது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது' என்று கூறி, கேனில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்தோணியின் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி, ஆட்டோவில் ஏற்றி பாலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அந்தோனி, ’என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்தே கொன்று விடுவீர்கள், எனவே நான் வரமாட்டேன்” என்று கூறி  அடம் பிடித்தார்...

தற்போது, அந்தோணியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments