ஆபாச வார்த்தைகளில் மிரட்டல்.. பாதுகாப்பு கேட்கும் இயக்குனர்..!

0 3714
முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என கூறியதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என கூறியதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

நீர்ப்பறவை, தர்மதுரை, தென்மேற்குப் பருவகாற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் மாமனிதன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாகவும் முதலமைச்சர் உதவ வேண்டும் என்றும் டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். பத்திரிக்கையாளர்களை உடனே சந்திக்க விரும்புவதாகவும் ஆடியோ வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீனு ராமசாமி, 800 படத்தில் நடிப்பதன் மூலம் விஜய்சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என தாம் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். அவரது நலன் கருதியே அதனை தாம் தெரிவித்ததாகவும் ஆனால், விஜய்சேதுபதிக்கு எதிராக தாம் செயல்பட்டதாக கூறி நள்ளிரவில் வாட்சப் வாயிலாக தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் சீனு ராமசாமி கூறினார்.

ஆபாச வார்த்தைகளில் மிரட்டல்கள் வருவதாகக் கூறிய சீனு ராமசாமி, ஆனால் அவர்கள் விஜய் சேதுபதி ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றார். விஜய் சேதுபதிக்கும் தமக்குமான நட்பு நன்றாகவே இருப்பதாகவும் தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து போலீசில் புகாரளிக்க உள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments