வரும் 5 ஆம் தேதிக்குள் கூட்டு வட்டி தொகை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

0 1341
வரும் 5 ஆம் தேதிக்குள் கூட்டு வட்டி தொகை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

6 மாத கடன் மொரட்டோரியம் காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கூட்டு வட்டி, வரும் 5 ஆம் தேதிக்குள் அவர்களின் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, எம்எஸ்எம்இ உள்ளிட்ட  2 கோடி ரூபாய் வரையிலான 8 வகை கடன்களின் மாதாந்திர தவணைகள் மீது வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டி எனப்படும் கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கூட்டு வட்டி தொகையை 5 ஆம் தேதிக்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்கில் செலுத்தியபின், அந்த தொகையை வங்கிகள் மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments