தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை

0 1519

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தளவாய்புரம் , கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பகலில் மழை பெய்தது. மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அரை மணி நேரம் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கம்பம், உத்தமபாளையம்,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments