தமிழ்நாட்டில் இன்று 2869 பேருக்கு கொரோனா உறுதி

0 3362
தமிழ்நாட்டில் இன்று 2869 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில், 2 - வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 869 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில், 4 ஆயிரத்து 19 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 31 பேர் உயிரிழந்தனர்.

தென்காசியில் 25 வயது இளம்பெண் ஒருவரும், சென்னையில் 95 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார்கள்.

சென்னையில், புதிதாக 764 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சென்னைக்கு அடுத்தபடியாக,கோயம்புத்தூரில் 271 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments